முன்விரோதம் காரணமாக இளைஞருக்கு கொலை மிரட்டல் விடுத்த 3பேர் மீது வழக்குபதிவு
கள்ளக்குறிச்சி அருகே இடம் தொடர்பாக முன்விரோதம் காரணமாக இளைஞருக்கு கொலை மிரட்டல் விடுத்த 3பேர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளனர்.;
By : King 24x7 Angel
Update: 2024-03-06 05:27 GMT
காவல் நிலையம்
கள்ளக்குறிச்சி அடுத்த புது உச்சிமேட்டைச் சேர்ந்தவர் நடராஜன் மகன் பாலகிருஷ்ணன், 40; இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த நாராயணன் மகன் முனுசாமி என்பவருக்கும் புறம்போக்கு இடம் தொடர்பாக முன்விரோதம் உள்ளது. கடந்த 3ம் தேதி காலை 6:30 மணிக்கு முனுசாமி தரப்பினர் பாலகிருஷ்ணனை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தனர். இது குறித்த புகாரின் பேரில், முனுசாமி,45; மனைவி கற்பகம், மகன் ராமலிங்கம் ஆகிய 3 பேர் மீது வரஞ்சரம் போலீசார் வழக்குப் பதிந்து, முனுசாமியை கைது செய்தனர்.