திருச்சியில் அண்ணாமலை மீது வழக்குப்பதிவு

அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி பிரச்சாரம் செய்ததாகக் கூறி திருச்சி தில்லை நகர் போலீசார் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் தொண்டர்கள் 700 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Update: 2024-03-31 08:17 GMT
பாஜக கூட்டணியில் அங்கம் வகிக்கும் அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் செந்தில் நாதனை ஆதரித்து பிரசாரம் செய்வதற்காக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை திருச்சிக்கு வருகை தந்து தென்னூரில் பிரசாரம் மேற்கொண்டார். இந்தப் பிரசாரத்தின் போது, தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளான அமமுக, பாமக, ஐஜேகே உள்ளிட்ட கட்சிகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முன்னதாக, பெரம்பலூரில் தனது பிரச்சாரத்தை முடித்துக் கொண்டு திருச்சியில் பிரச்சாரம் செய்தபோது தேர்தல் விதிகளின்படி அனுமதிக்கப்பட்ட நேரத்தை கடந்து இரவு பிரச்சாரம் மேற்கொண்டதால், திருச்சி தில்லை நகர் போலீசார் 5 பிரிவுகளில் அண்ணாமலை உள்ளிட்ட கட்சி தொண்டர்கள் 700 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
Tags:    

Similar News