வியாபாரியிடம் கத்தியை காட்டி மிரட்டிய வாலிபர் மீது வழக்கு பதிவு

ஏற்றகோடு பகுதியில் வியாபாரியிடம் கத்தியை காட்டி மிரட்டிய வாலிபர் மீது போலீசார் வழக்கு பதிவு.

Update: 2024-03-20 12:01 GMT

காவல்துறை விசாரணை


கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் அருகே வியனூர் ஏற்றக்கோடு பகுதியை சேர்ந்தவர் டார்வின் தாஸ் (49). பாத்திரக்கடை நடத்தி வருகிறார். அதே பகுதியை சேர்ந்தவர் விஜு.கூலித்தொழிலாளி. விஜுவின் உறவினரிடம் இருந்து ஒன்றரை சென்ட் நிலத்தை டார்வின்தாஸ் விலைக்கு வாங்கினாராம். ஆனால் இதுதொடர்பாக டார்வின்தாசிடம், விஜு அடிக்கடி தகராறு செய்து வந்தாராம். இதையடுத்து டார்வின் தாஸ் அந்த நிலத்தை திரும்ப ஒப்ப டைத்துவிட்டதாக கூறப்ப டுகிறது.ஆனாலும் விஜு அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார். இந்த நிலையில் சம்பவத்தன்று நள்ளிரவு 11 மணியளவில் டார்வின் தாஸ் வீட்டின் காம்பவுண்டு சுவர் ஏறிகுதித்து உள்ளே சென்ற விஜு தகராறு செய்ததோடு டார்வின்தாசிடம் கத்தியை காட்டி கொலைமிரட்டல் விடுத்துள்ளார். சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் வரவே, விஜு அங்கிருந்து சென்றுவிட்டாராம். இது குறித்து டார்வின்தாஸ் திருவட்டார் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதன்பேரில் விஜு மீது போலீசார் இன்று வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News