பணம் - நகை கொள்ளை இரு காவலர்கள் பணியிட மாற்றம்
மதகுபட்டியில் நகை பணம், கொள்ளையடிக்கப்பட்ட நிலையில் கவனக்குறைவாக செயல்பட்டதாக இரு காவலர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.;
By : King 24x7 Angel
Update: 2024-06-13 05:09 GMT
கொள்ளை
சிவகங்கை மாவட்டம், சிவகங்கை அருகே மதகுபட்டியில் தச்சம்புதுப்பட்டி சாலையில் பாண்டித்துரை என்பவர் ஏழுமலையான் பைனான்ஸ் மற்றும் அடகு கடை நடத்தி வருகிறார் . கடையின் சுவற்றை மர்ம நபர்கள் நவீன இயந்திரம் மூலம் துளையிட்டு உள்ளே புகுந்து நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
இதுகுறித்து சிவகங்கை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டோங்கரே உமேஷ் பீரவீன் சம்பவ இடத்தை நேரில் ஆய்வு மேற்கொண்டார். மதகுபட்டி காவல் நிலையத்தில் இரவு நேர பணியில் இருந்த சிறப்பு எஸ்.ஐ பாண்டி, காவலர் சாகுல் இருவரையும் ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார்.