கிராமத்து விஞ்ஞானிகளுக்கு ரொக்கப்பரிசு அறிவிப்பு! நாமக்கல் மாவட்ட ஆட்சியர் தகவல்!

கிராமத்து விஞ்ஞானிகளுக்கு 2018-19ம் ஆண்டு முதல், ஆண்டு தோறும், சிறப்பு விருது மற்றும் தலா ரூ. 1 லட்சம் ரூபாய், ரூ. 2 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்பட்டு வருகிறது. 2023-24ம் ஆண்டிற்கான ஊரக கண்டுபிடிப்பாளர் விருதுகளுக்கான விண்ணப்பங்களை, தமிழக அரசின் அறிவியல் நகரம் வரவேற்கிறது.

Update: 2024-06-03 07:24 GMT

ஆட்சியர் உமா

ஊரக கண்டுபிடிப்பாளர் விருதுக்கு தகுதியான நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இது குறித்து, நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது, கிராமப்புற மக்களின் அறிவுத்திறனை ஊக்குவித்து, பல பயனுள்ள புதிய கண்டுபிடிப்புகளை வெளிக்கொணரும் வகையில், மாநில அளவில் 2 சிறந்த கிராமப்புற பகுதியை சேர்ந்த கண்டுபிடிப்பாளர்களுக்கு, 2018-19ம் ஆண்டு முதல், ஆண்டு தோறும், சிறப்பு விருது மற்றும் தலா ரூ. 1 லட்சம் ரூபாய், ரூ. 2 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்பட்டு வருகிறது. 2023-24ம் ஆண்டிற்கான ஊரக கண்டுபிடிப்பாளர் விருதுகளுக்கான விண்ணப்பங்களை, தமிழக அரசின் அறிவியல் நகரம் வரவேற்கிறது. விண்ணப்பப்படிவம், விண்ணப்பப்படிவத்தினை பூர்த்தி செய்வதற்கான வழிகாட்டுதல் குறிப்புகள் ஆகியவற்றை www.sciencecitychennai.in- என்ற வெப்சைட்டில் அறிவிப்புகள் பகுதியில் விண்ணப்பதாரர்கள் டவுன்லோடு செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள், மாவட்ட ஆட்சியர் மூலம் அறிவியல் நகரத்திற்கு, வரும், ஆகஸ்ட் 31க்கு முன் வந்து சேரும் வகையில் விண்ணப்பித்து பயன்பெறலாம் என கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News