பாபநாசத்தில் வாகன சோதனையில் பணம் பறிமுதல்
பாபநாசம் பகுதியில் வாகன சோதனையின் போது ரூ 64,680 பணம் பறிமுதல் செய்தனர்.;
பறிமுதல் செய்ப்பட்ட பணம்
பாபநாசம் பகுதியில் வாகன சோதனையின் போது ரூ 64,680பணம் பறிமுதல் பறக்கும் படை அதிகாரி நடவடிக்கை தஞ்சாவூர் கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் ரெகுநாதபுரம் பகுதியில் பறக்கும் படை அதிகாரி செந்தில், சப் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் குழுவினர்கள் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
.அப்போது திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த சீனிவாசன் என்பவரது மனைவி கிருத்திகா என்பவர் காரில் வந்த போது அவரிடம் சோதனை செய்ததில் ரூபாய் 64 ஆயிரத்து 680 பணம் எடுத்துச் சென்றது கண்டுபிடிக்கப்பட்டது உரிய ஆவணம் இல்லாததால் பணம் கைப்பற்றப்பட்டது.
கைப்பற்ற பட்ட பணத்தை தேர்தல் பறக்கும்படை அதிகாரி பாபநாசம் வட்டாட்சியர் மணிகண்டனிடம் ஒப்படைத்தார் உடன் தேர்தல் துணை வட்டாட்சியர் விவேகானந்தன் மண்டல துணை வட்டாட்சியர் தமயந்தி ஆகியோர் உடன் இருந்தனர்.