வாழப்பாடி அருகே அமமுக நிர்வாகியிடம் 16.86 லட்சம் பறிமுதல்
வாழப்பாடி அருகே அமமுக நிர்வாகியிடம் தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி.;
Update: 2024-04-02 11:54 GMT
பறிமுதல்
சேலம் மாவட்டம் வாழப்பாடி ஆத்தூர் புதுப்பெட்டி மாரியம்மன் கோயில் அருகே இன்று காலை தேர்தல் பறக்கும் படை அலுவலர் கணேசன் தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக டூவீலரில் வாழப்பாடி எழில்நகர் பகுதியை சேர்ந்த அமமுக மாவட்ட செயலாளர் சண்முகம் வந்தார். அவரை அதிகாரிகள் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது, உரிய ஆவணங்களின்றி 16,86,690 ரூபாயை எடுத்து சென்றது தெரியவந்தது. இதையடுத்து அதிகாரிகள் அந்த பணத்தை பறிமுதல் செய்தனர். இதை தொடர்ந்து அதிகாரிகள், அந்த பணத்தை வாழப்பாடி வட்டாட்சியரும், கூடுதல் தேர்தல் நடத்தும் அலுவலருமான ஜெயந்தியிடம் ஒப்படைத்தனர்.