தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் 32 லட்சத்து 500 ரூபாய் பறிமுதல்
தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில் வங்கியில் இருந்து கொண்டு வந்த வசூல் பணம் ரூபாய் ஒரு கோடியே 32 லட்சத்து 500 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது
Update: 2024-03-29 18:14 GMT
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில் வங்கியில் இருந்து கொண்டு வந்த வசூல் பணம் ரூபாய் ஒரு கோடியே 32 லட்சத்து 500 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே தென்காசி சாலையில் உள்ள சொக்கநாதன் புத்தூர் முகவூர் சாலையில் தேர்தல் பறக்கும் படை அலுவலர் ஆண்டாள் தலைமையிலான குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக பாலமுருகன் என்பவர் ஓட்டி வந்த தனியார் பணம் நிரப்பும் வாகனத்தை சோதனை செய்தனர். வாகனத்தில் ஒரு கோடியே 32 லட்சத்து 50 ஆயிரம் பணம் பெட்டியில் வைக்கப்பட்டு இருந்தது. விசாரணையில் தென்காசி மாவட்டம் ஆலங்குளத்திற்கு பணத்தை கொண்டு செல்வதாக பாலமுருகன் கூறியுள்ளார். ஆனால் பணம் கொண்டு செல்வதற்கான உரிய ஆவணங்கள் இல்லாததால் பணத்தை பறிமுதல் செய்த பறக்கும் படை அதிகாரிகள் வட்டாட்சியர் ஜெயபாண்டியிடம் ஒப்படைத்தனர். பறிமுதல் செய்யப்பட்ட பணம் ரூபாய் பத்து லட்சத்திற்கும் அதிகம் என்பதால் இது தொடர்பாக வருமான வரித்துறை விசாரணைக்கு அனுப்ப உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.