உரிய ஆவணங்களின்றி மோட்டார் பைக்கில் எடுத்துச் சென்ற ரூ 62 ஆயிரம் பறிமுதல்
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே சிறுமருதூரில் உள்ள திருச்சி சிதம்பரம் பைபாஸ் சாலையில் தேர்தல் பறக்கும் படை அணியின் ஏ.பிரிவினர் இன்று காலை 7.15 மணிக்கு வாகன சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது உரிய ஆவணங்கள் இன்றி மோட்டார் பைக்கில் எடுத்துச் சென்ற ரூ. 62 ஆயிரம் பறிமுதல் செய்தனர்.;
Update: 2024-03-29 06:24 GMT
வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைப்பு
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே சிறுமருதூரில் உள்ள திருச்சி சிதம்பரம் பைபாஸ் சாலையில் தேர்தல் பறக்கும் படை பி. பிரிவின் தலைவர் ஜெயசீலி ப்ரீத்தா தலைமையில் பறக்கும் படை குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது திருவாணைக்காவல் பகுதியைச் சேர்ந்த பரமசிவம் மோட்டார் பைக்கில் சென்று கொண்டிருந்தார். அவரை மறித்து தேர்தல் பறக்கும் படை அலுவலர்கள் சோதனை செய்த போது உரிய ஆவணங்கள் இன்றி ரூ.62 ஆயிரம் பணம் எடுத்துச் செல்லப்பட்டது தெரியவந்தது.பின்னர் அவரிடமிருந்து பணம் பறிமுதல் செய்யப்பட்டு லால்குடி வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் முருகன் வசம் ஒப்படைக்கப்பட்டு லால்குடி சார்நிலை கருவூலகத்தில் பாதுகாப்பு பெட்டகத்தில் வைக்கப்பட்டது.