சாதி வாரி கணக்கெடுப்பை எடுக்க வேண்டும்: அன்புமணி ராமதாஸ்

சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

Update: 2023-10-22 15:33 GMT

அன்புமணி ராமதாஸ்


இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

தூத்துக்குடி விமான நிலையத்தில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளருக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் பேசும்போது சமீப காலத்தில் கடற் கொள்ளையர்களின் தொந்தரவு அதிகமாக உள்ளது. இந்த கடற்கொள்ளையர்கள் இலங்கை கடற்படையாளும் அவர்களுடைய ஆதரவால் நம்முடைய மீனவர்களை அச்சுறுத்தி அவர்களை அடித்து அவருடைய மீன்களை கொள்ளை அடித்து வருகிறார்கள் இதை இலங்கை அரசு தடுத்து நிறுத்த வேண்டும்.

இந்திய அரசும் தடுக்க வேண்டும் கடந்த வாரம் ராமேஸ்வரத்திலிருந்து பதினைந்து மீனவர்களை இலங்கை மீனவர்கள் கைது செய்துள்ளனர். நேற்றைய முன்தினம் நாகையில் உள்ள மீனவர்களை கைது செய்திருக்கிறார்கள் இலங்கை அரசுக்கு இந்திய அரசு இரண்டு மில்லியன் 12 ஆயிரம் கோடி ரூபாய் உதவி செய்துள்ளது. இந்த உதவி நிபந்தனை இல்லாத உதவி இவ்வளவு உதவி செய்தும் இண்ணமும் நம்முடைய மீனவர்களை தாக்கி கைது செய்து கொண்டு இருக்கிறது வேதனைக்குரியது.

தமிழக அரசு எடுத்துச் சொல்ல வேண்டும் இந்திய அரசும் இதை கண்டிக்க வேண்டும் சமீப காலத்தில் தென் மாவட்டங்கள் கனிம வளங்கள் கொள்ளை அடிக்கப்பட்டு வருகிறது கன்னியாகுமரி மாவட்டம் அங்கு ஒவ்வொரு நாட்களுக்கும் ஆயிரக்கணக்கான லாரிகள் மூலம் கேரளாவிற்கு கனிம வளங்கள் கொள்ளையடிக்கப்பட்டு வருகிறது. இதில் அரசியல் பெரிய புள்ளிகள் இதன் பின்னணியில் இருப்பதாக செய்திகள் வந்து கொண்டிருக்கிறது ஆனாலும் எந்த நடவடிக்கையும் இல்லை இந்த கனிம வளங்களை மேலோட்டமாக பார்க்க கூடாது சுற்றுச்சூழலுக்கு மிகப்பெரிய பாதிப்பு அது மட்டுமில்லாமல் சக்தி வாய்ந்த வெடிகுண்டுகளை வைத்து வெடித்து அந்த வளங்களை கொள்ளை அடிக்கப்பட்டு வருகிறது இதை தடுத்து நிறுத்த வேண்டும் பட்டாசு ஆலைகள் பாதுகாப்பாக நடத்தப்பட வேண்டும் சமீபத்தில் விருதுநகர் சிவகாசி கிருஷ்ணகிரி போன்ற பகுதிகளில் விபத்து ஏற்பட்டு உயிர் பலியாகி உள்ளது பாதுகாப்பாக இருக்க வேண்டும் நிவாரணம் அரசு 5 லட்சம் கொடுத்துள்ளது நிவாரணத் தொகையை 25 லட்சமாக வழங்க வேண்டும் வழங்க ஜாதி வாரி கணக்கெடுப்பு தமிழக அரசு நடத்த வேண்டும் தமிழக அரசு குறிப்பாக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் கையில் வெண்ணெய் வைத்துக் கொண்டு நெய் கலைய கூடிய சூழல் இருக்கிறது. கடந்த வாரம் பீகார் மாநிலத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்திய அதை வெளியிட்டு இருக்கிறார்கள் அவர்கள் நடத்துவதற்கு கிட்டத்தட்ட 45 நாட்கள் 500 கோடி ரூபாய் செலவில் 13 கோடி மக்களுக்கு கணக்கெடுப்பு நடத்தினார்கள் ஜாதிவாரி என்றால் எண்ணிக்கை மட்டும் அல்ல ஒவ்வொரு சமுதாயமும் எந்த நிலையில் இருக்கிறார்கள் அவருடைய சமூக பின் தங்கிய நிலை கல்வி நிலை சுற்றுச்சூழல் சுகாதாரம் எல்லாவற்றையும் எடுப்பதுதான் கணக்கெடுப்பு கர்நாடகா அரசு 2018 எடுத்தது தற்போது வெளியிட இருக்கிறது சமீபத்தில் ஆந்திரா அரசு நவம்பர் 15 இலிருந்து நாங்கள் ஜாதி வாரி கணக்கிடப்பு நடத்துவோம் என அறிவித்திருக்கிறது ஒரிசா அரசு ஜூன் மாதம் ஒன்றாம் தேதியிலிருந்து நடத்தி இருக்கிறது ராஜஸ்தான் அரசு நாங்கள் நிச்சயமாக மீண்டும் வெற்றி பெற்றால் நடத்துவோம் என சொல்லி இருக்கிறார்கள் சமீபத்தில் தெலுங்கானா அரசும் வெற்றி பெற்றால் நிச்சயம் செய்வோம் என கூறி இருக்கிறார்கள் இவ்வளவு மாநிலங்கள் இந்தியாவிலே ஜாதி வார கணக்கெடுப்பு நடத்துவோம் என கூறியிருக்க கூடிய நிலையில் தமிழ்நாட்டு மட்டும் மத்திய அரசு நடத்த வேண்டும் இது எங்களுடைய வேலை கிடையாது என சமூக நீதியை பேசுகின்ற திமுக அரசு அவருடைய கடமையை தட்டி கழித்துக் கொண்டிருக்கிறார்கள் பெரியார் பிறந்த மண் என கூறி இந்த மண்ணில் முதல் முதலில் நாம் தான் செய்திருக்க வேண்டும் பெரியார் பெயரை பயன்படுத்தும் நாம் பெரியார் கொள்கைகளை நடைமுறைப்படுத்த தயங்கிக் கொண்டிருக்கிறீர்கள் என்ன காரணம் அதிகாரம் இல்லை என சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது பீகார் மாநிலத்தில் அங்கே ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்த அதை எதிர்த்து பீகார் உயர்நீதிமன்றத்திற்கு எதிராளிகள் சென்றார்கள் ஆனால் அதற்கு தடை விதிக்கவில்லை அது மட்டும் அல்ல உச்ச நீதிமன்றம் அதை உறுதி செய்திருக்கிறது எந்த தடையும் கொடுக்கவில்லை அதிகாரத்தை இங்கே வைத்துக் கொண்டு எங்களிடம் அதிகாரம் இல்லை என மத்திய அரசை பார்த்து சொல்கிறீர்கள் நிச்சயமாக உங்களுக்கு அதிகாரம் இருக்கிறது அதை தமிழக அரசு அறிவிக்க வேண்டும் அப்படி யாராவது அதிகாரம் இல்லை என சொன்னால் நீதிமன்றத்திற்கு செல்லட்டும் நீதிமன்றத்தில் தடை சொன்னால் அதன் பின்பு பார்த்துக் கொள்ளலாம் நீங்கள் உண்மையாக இருந்தால் அதை அறிவிக்கலாம் தமிழ்நாட்டில் தான் முதல் முதலாக ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்திருக்க வேண்டும் இந்தியாவில் அதிக இட ஒதுக்கீடு தமிழகத்தில் மட்டும் தான் இருக்கிறது 69 விழுக்காடு வேறு எந்த மாநிலத்திலும் இந்த அளவிற்கு கிடையாது உச்ச நீதிமன்றம் 69 விழுக்காடு இட ஒதுக்கீடு எதற்கு கொடுக்க வேண்டும் என கேள்வி கேட்டு இருக்கிறது மருத்துவர் ராமதாஸ் பல்வேறு அழுத்தங்களை கொடுத்திருக்கிறார் ஜாதி வாரி கணக்கெடுப்பு எடுப்பதற்காக கலைஞர் அவர்களை பலமுறை பார்த்திருக்கிறார் ஜெயலலிதா பலமுறை பார்த்திருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி பலமுறை பார்த்து ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்துங்கள் என சொல்லி இருக்கிறார் இன்று அதை நடத்த வேண்டிய சூழல் இருக்கிறது ஆனாலும் இவன் தமிழக அரசு மத்திய அரசு நடத்த வேண்டும் என கூறி வருகிறார்கள் பாஜக கொள்கை முடிவாக சொல்லி இருக்கிறார்கள் நாங்கள் ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்த மாட்டோம் என சொல்லிவிட்டார்கள் தங்களால் முடியாது என்று சொல்ல சொல்லிய பிறகு மத்திய அரசு செய்ய வேண்டும் என்பது தங்கள் கடமையை தட்டிக் கழிப்பதாக நினைக்கிறேன். ஜாதிவாரி கணக்கு கணக்கெடுப்பு நடத்தாவிட்டால் 69 %இட ஒதுக்கீட்டிற்கு பாதிப்பு ஏற்படும் நாங்கள் வெற்றி பெற்றதும் ஒரு வாரத்தில் நீட் தேர்வை ரத்து செய்வோம் என கூறினார்கள் இன்று முட்டையை காண்பிப்பது வேறு ஒரு வாரத்தில் நீட் தேர்வு ரத்து செய்வோம் என மேடைக்கு மேடை சொன்னவர்கள் திமுகவினர் இன்று ஆட்சிக்கு வந்து 2.5 ஆண்டுகள் ஆகிறது இன்னும் ரத்தாகவில்லை நீட் தேர்வு தமிழகத்திற்கு இந்தியாவிற்கும் தேவையில்லை அன்புமணி ராமதாஸ் பேட்டி நீட் தேர்வில் தகுதியான மருத்துவர்கள் உருவாக்க வேண்டும் மருத்துவ கல்வி வணிகமயமாக கூடாது எனக் கூறினார்கள் இன்று இரண்டுமே தோல்வி அடைந்து விட்டது உயர்கல்விக்கு ஜீரோ மதிப்பெண் எடுத்தால் தகுதியானவர்கள் ஆகிவிடுகிறீர்கள் எம்பிபிஎஸ் இருக்கு 540 மதிப்பெண் எடுத்த மாணவனால் படிக்க முடியவில்லை நூத்தி இருவது வாங்கிய ஒரு கோடீஸ்வரனின் மகன் எம்பிபிஎஸ் படிக்கிறான் என்ன அவருடைய தந்தை கோடி கணக்கில் பணம் வைத்திருக்கிறார் அப்படி இருக்கும் போது உங்கள் நியாயம் என்ன எதற்காக நீட் வருவதற்கு முன்பாக இருந்த கட்டணம் 5 லட்சம் ஆறு லட்சம் இருந்தது இன்று 25 லட்சம் 30 லட்சம் ஒவ்வொரு ஆண்டும் நீர் பயிற்சி என்ற முறையில் மோசடி நடைபெற்று வருகிறது இந்தியா முழுவதும் ஆயிரக்கணக்கான மையங்கள் நடத்தப்பட்டு வருகிறது இந்த நீர் பயிற்சிக்காக கொள்ளை அடிக்கப்பட்டு வருகிறது நீங்கள் கொண்டு வந்த நீட் தேர்வுகள் முழுமையாக வணிகமயமாக்கப்பட்டு விட்டது 2006 இல் இருந்து தமிழகத்தில் நுழைவுத் தேர்வு 12ஆவது மதிப்பெண் வைத்து தான் மருத்துவத்திற்கு சேர்த்தார்கள் 85 90 மதிப்பெண்கள் எடுத்தால் தான் இடம் கிடைத்தது இன்று ஜீரோ கிடைத்தால் போதும் மத்திய அரசு மாநில அரசும் நீட் தேர்வு பொருத்தவரையில் உண்மையாக இல்லை வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தங்கள் நிலைப்பாட்டை விரைவில் அறிவிப்போம் தேர்தலுக்கு இன்னும் ஆறு மாதங்கள் இருக்கிறது விரைவில் முடிவெடுப்போம். மகளிர் உரிமைத்துறை உரிமைத் தொகை அறிவித்த போது கூறிய வாக்குறுதியை நீட் தேர்வை போல் தான் நினைக்கிறேன் அனைவருக்கும் கொடுப்போம் என சொன்னது இன்று தகுதி அடிப்படையில் என்று கூறுவதை ஏற்க முடியாது கொடுத்தால் முழுமையாக அனைவருக்கும் கொடுக்க வேண்டும் குறைபாடு இருக்கக் கூடாது. சமீபத்தில் தமிழக அரசு மதுரை மாவட்டத்தில் கிரானைட் எடுக்க உரிமம் இந்த மாதம் இறுதியில் ஏலம் விடப் போகிறார்கள் மதுரை மாவட்டம் கிரானைட் என்று சொன்னாலே மகா ஊழல் கடந்த காலத்தில் நாம் பார்த்திருக்கிறோம் ஒட்டுமொத்த மாவட்டத்தை அழிக்கக்கூடிய நிலையில் இடைக்காலத்தில் சற்று தடை இருந்தது அப்பொழுது பரவால்லாமல் இருந்தது தற்போது மீண்டும் அழிக்க துடித்துக் கொண்டிருக்கிறார்கள் மீண்டும் ஊழல் நடைபெறாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் பாட்டாளி மக்கள் கட்சியை பொறுத்தவரையில் அரசியல் நடத்த வேண்டும் தனியாருக்கு கொடுக்க வேண்டிய தேவையில்லை அரசுக்கு கூடுதலாக வருமானம் வரும் தனியாருக்கு கொடுத்தால் என்ன அளவில் எடுக்கிறார்கள் என்ன கணக்கு என்பது யாருக்கும் தெரியாது. தமிழகத்தின் சட்ட முழங்கை பற்றி கஞ்சாவை கட்டுப்படுத்தினால் சட்டம் ஒழுங்கு சீராக இருக்கும் எங்கு பார்த்தாலும் கஞ்சா விட்டுக் கொண்டிருக்கிறார்கள் தமிழகத்தில் இதுபோல் ஒருநாளும் நிலை வந்தது கிடையாது கடத்த பத்து வயதினை ஆண்டுகளாக போதை பொருள் விற்பனை அதிகமாக இருந்து கொண்டு இருந்தது தற்போது உச்சத்தில் இருக்கிறது பள்ளிக்கூடத்து வாயிலிலும் கல்லூரி வாயிலிலும் கஞ்சா கிடைக்கிறது நடக்கும் கொலை குற்றங்கள் அனைத்தும் மது மற்றும் கஞ்சாவில் தான் கொலை நடந்து கொண்டிருக்கிறது இதை கட்டுப்படுத்த வேண்டும் என்றால் கஞ்சாவை கட்டுப்படுத்த வேண்டும் மோசமான சூழ்நிலையில் உள்ளது கேரளாவில் இருந்து ஒரு பகுதி இலங்கையில் இருந்து தமிழகத்தை சுற்றி வந்து கொண்டிருக்கிறது நமது பிள்ளைகள் ரொம்ப மோசமான சூழ்நிலையில் இருக்கிறார்கள் முதலமைச்சர் நேரடியாக சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் மாதாமாதம் கடுமையான கட்டளைகளை காவல்துறைக்கு இடவேண்டும் காவல்துறைக்கு தெரியாமல் ஒரு பொட்டலம் கஞ்சா கூட விற்க முடியாது.

Tags:    

Similar News