திருவள்ளூர் அருகே இரவில் உலா வரும் கால்நடைகள்: வாகன ஓட்டிகள் அச்சம்

திருவள்ளூர் அருகே இரவில் உலா வரும் கால்நடைகளால் வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்துள்ளனர்.

Update: 2024-01-29 10:39 GMT

இரவில் உலா வரும் கால்நடைகள்

திருவாலங்காடு ஒன்றியம் கனகம்மாசத்திரம் -தக்கோலம் மாநில நெடுஞ்சாலை வழியாக தினமும், 30,000த்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கு சென்று வருகின்றன.

திருவாலங்காடு ரயில் நிலையத்தில் இருந்து வேலைக்கு சென்னை, திருவள்ளூர் செல்வோர் அதிகம். அவர்கள் பெரும்பாலும் இருசக்கர வாகனத்தில் இச்சாலை வழியாகவே சென்று வருகின்றனர்.

இங்கு சின்னகளக்காட்டூர் பகுதியில், இரவில் நெடுஞ்சாலையில் கால்நடைகள் சாலை நடுவில் கும்பலாக படுத்து, திடீரென எழுந்து, சாலையின் குறுக்கே ஓடும். அப்போது, இரவில் வரும் இருசக்கர வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி, விபத்திற்குள்ளாகின்றனர்.

நான்கு சக்கர வாகனங்களும், ஆட்டோக்களும், அவ்வப்போது, கால்நடைகளால், விபத்திற்குள்ளாகி, அவற்றில் பயணம் செய்வோர் காயமடைந்து விடுகின்றனர்.

எனவே, சாலையில் திரியும் கால்நடைகளை, பிடித்து, அவற்றின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்களும், வாகன ஓட்டிகளும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News