காவிரி ஆறு அணை ஷட்டர்கள் சீரமைக்கும் பணி தொடக்கம்

திருச்சி மாவட்டம் முக்கொம்பு மேலணையில் காவிரி ஆறு அணையின் ஷட்டர்களை சீரமைக்கும் பணியை நீர்வளத்துறை அதிகாரிகள் தொடங்கினர்.

Update: 2024-05-13 15:17 GMT

திருச்சி மாவட்டம் முக்கொம்பு மேலணையில் காவிரி ஆறு அணையின் ஷட்டர்களை சீரமைக்கும் பணியை நீர்வளத்துறை அதிகாரிகள் தொடங்கினர்.


திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே வாத்தலையில் முக்கொம்பு மேலணை உள்ளது .இங்கிருந்து காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறு பிரிகிறது.காவிரியாற்றில் அதிகபட்சமாக 1,80,000 கனஅடி நீர் வெளியேற்றும் வகையில் அமைக்கப்பட்டுள்ள இந்த அணை, டெல்டா பகுதியில் உள்ள 12 லட்சம் ஏக்கர் பாசனத்துக்கு உதவுகிறது. முக்கொம்பு மேலணை என்ற இடத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தடுப்பணையின் ஷட்டர்களை சீரமைக்கும் பணியை நீர்வளத்துறை அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர். 1977 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட பிறகு, ஷட்டர்களின் விரிவான பழுதுபார்க்கும் பணி மேற்கொள்ளப்படுவது இதுவே முதல் முறை என்று WRD வட்டாரங்கள் தெரிவித்தன. தடுப்பணையின் 41 ஷட்டர்களிலும் பழுதுபார்ப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் மேட்டூர் அணை பாசனத்திற்காக திறக்கப்படுவதற்கு முன்னதாக,மே மாத இறுதிக்குள் முடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் தடுப்பணையின் கீழ்பகுதியில் சேதமடைந்த ஏப்ரனை சீரமைப்பதற்கான முன்மொழிவு ஏற்கனவே அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும், தேர்தல் நடத்தை விதிமுறைகள் நீக்கப்பட்ட பிறகு அனுமதிக்கப்படும் என்றும் WRD வட்டாரங்கள் தெரிவித்தன.
Tags:    

Similar News