காவிரி குடிநீர் குழாயில் உடைப்பு - மக்கள் கடும் சிரமம்
குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வெளியேறுவதால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுகிறது. இதனை சரிசெய்ய பொதுமக்கள் கோரிக்கை விடுகின்றனர்.
By : King 24x7 Angel
Update: 2024-02-14 05:30 GMT
விராலிமலை புதுகை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் காவிரி கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் திருச்சி முத்தரசநல்லுார் அருகே காவிரி ஆற்றில் பிரமாண்ட ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டு நீரேற்று நிலையம் மூலம் தண்ணீர் உறிஞ்சப்பட்டு குழாய்கள் மூலம் இனாம்குளத்துார் வழியாக விராலிமலை, மலைக்கு டிபட்டி, இலுப்பூர், அன்னவாசல், புதுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளுக்கு அனுப்பப்பட்டு வருகிறது. இந்த குடிநீர் குழாய்களில் அவ்வப்போது உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வெளியேறி வீணாகும் நிலை நீடித்து வருகிறது. இந்நிலையில் விராலிமலை காமராஜர் நகரில் இனாம்குளத்துார் பிரிவு சாலை கால்நடை மருத்துவமனை எதிரே உள்ள குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக குடிநீர் வெளியேறி வீணாகி வருகிறது. இதனால் வாகன ஓட்டுனர்களும், குடிநீர் தட்டுப்பாட்டால் அப்பகுதி மக்களும் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். குடிநீர் வடிகால் வாரியம் உடனடியாக குழாயில் ஏற்பட்ட உடைப்பை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுகின்றனர்.