அரசு பேருந்து மாற்றுதிறனாளி தம்பதி வாகனத்தில் மோதிய சிசிடிவி காட்சி

மயிலாடுதுறையில் மாற்றுத்திறனாளியின் மூன்று சக்கர வாகனத்தில் சென்ற மாற்றுத்திறனாளி மீது அரசு பேருந்து மோதும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. அதிர்ஷ்டவசமாக மனைவியுடன் உயிர் தப்பிய மாற்றுத்திறனாளி படுகாயங்களுடன் தஞ்சாவூர் அரசு மருத்துவமனை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Update: 2024-06-06 02:12 GMT

 சிசிடிவி காட்சி

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை கிட்டப்பா தெருவை சேர்ந்த டைலர் மாற்றுத்திறனாளி அரபுதுல்லா(38). இவர் கடந்த 3ஆம் தேதி இரவு மயிலாடுதுறை பேருந்து நிலையம் பகுதியில் இருந்து தனது மாற்றுத்திறனாளி மூன்று சக்கர வாகனத்தில் மனைவி ஷகிலா பானுவுடன் சென்றுள்ளார். அப்போது கும்பகோணத்திலிருந்து சிதம்பரம் செல்லும் சிறப்பு பேருந்து கூறைநாடு பகுதியில் மாற்றுத்திறனாளி அரபத்துல்லா வாகனத்தின் மீது மோதியது. இதில் மூன்று சக்கர வாகனம் நசுங்கி அரபத்துல்லா மற்றும் அவரது மனைவி ஷகிலாபானு படுகாயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர்த்தப்பினர்.

படுகாயம் அடைந்த இருவரும் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். தொடர்ந்து தலையில் அடிபட்ட அரபத்துல்லா தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மேல் சிகிச்சை பெற்று வருகிறார். மயிலாடுதுறை போலீசார் அரசு பேருந்து ஓட்டுனர் முரளி செல்வன் மீது விபத்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இந்நிலையில் மாற்றுத்திறனாளி மீது அரசு பேருந்து மோதி விபத்து ஏற்பட்ட சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.

Tags:    

Similar News