சர்வதேச வன நாள் கொண்டாட்டம் !
தலைவாசல் வட்ட வேளாண்மை உதவி இயக்குநர் மணவழகன் தலைமையில் சர்வதேச வன நாள் விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.;
Update: 2024-03-22 09:41 GMT
வன நாள் கொண்டாட்டம்
கெங்கவல்லி :சேலம் மாவட்டம் பட்டுத்துறை ஊராட்சியில் தலைவாசல் வட்ட வேளாண்மை உதவி இயக்குநர் மணவழகன் தலைமையில் சர்வதேச வன நாள் விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது. சேலம் மாவட்டம், தலைவாசலை அடுத்துள்ள பட்டுத் துறை ஊராட்சியில் சர்வதேச வன நாளை பெரம்பலூர் ரோவர் வேளாண்மை கல்லூரி மாணவர்கள் சிறப்பாக கொண்டாடினார்கள். சர்வதேச வன நாளை முன்னிட்டு வேளாண் பணி அனுபவம் குறித்து வேளாண் கல்லூரி மாணவர்கள் துண்டு பிரசுரங்களை வழங்கி பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினர். மரங்கள், காடுகளின் முக்கியத்துவம் குறித்த துண்டு பிரசுரங்களை வழங்கினர். இதில் ஏராளமான வேளாண் அலுவலர்கள், வனத் துறையினர் திரளாக கலந்து கொண்டனர்.