சேலத்தில் வாலிபரிடம் செல்போன் பறிப்பு

சேலத்தில் வாலிபரிடம் பணம், செல்போனை திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.;

Update: 2024-01-06 09:23 GMT

கோப்பு படம் 

சேலம் கிச்சிப்பாளையம் கஸ்தூரிபாய் தெருவை சேர்ந்தவர் முத்துசாமி. இவரது மகன் அங்கமுத்து (34) இவர் சேலம் பஸ் நிலையம் அருகே உள்ள பூக்கடைக்கு வந்தார். அப்போது அங்கு நின்றுகொண்டிருந்தார்.

அப்போது அவர் தனது பாக்கெட்டில் வைத்திருந்த ரூ.10 ஆயிரம் பணமும், செல்போனையும் மர்ம நபர்கள் திருடி சென்று விட்டனர். அங்கமுத்து தனது பாக்கெட்டில் பார்த்த போது செல்போனை மற்றும் பணத்தை காணவில்லை.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் யாரோ திருடி சென்றது தெரியவந்தது. இது குறித்து அங்கமுத்து டவுன்போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து செல்போன், பணத்தை திருடியது யார் என்று விசாரணை செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News