கல்லூரி மாணவனிடம் செல்போன் திருட்டு!
கல்லூரி மாணவனிடம் செல்போன் திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றன.;
By : King 24x7 Angel
Update: 2024-02-08 07:04 GMT

கல்லூரி மாணவனிடம் செல்போன் திருட்டு போலீசார் விசாரணை
கோவை: பொன்னையராஜபுரம் பகுதியைச் பால குருசாமி மகன் மனோஜ் குமார்(18). தனியார் கல்லூரியில் தகவல் தொழில்நுட்ப துறை முதலாம் ஆண்டு படித்து வருகிறார். சம்பவத்தன்று சொக்கம்புதூர் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தபோது இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் மனோஜ் குமாரின் சட்டை பையில் இருந்த செல்போனை திருடிவிட்டு மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றுள்ளனர்.இதுகுறித்து மனோஜ் குமார் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்துள்ள வெரைட்டி ஹால் ரோடு போலீசார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளைக் கொண்டு திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.