கத்தியை காட்டி செல்போன் திருட்டு
செங்கல்பட்டு அருகே வடமாநில இளைஞர்களிடம் கத்தியை காட்டி பணம் மற்றும் செல்போனை மர்ம நபர்கள் பறித்து சென்றனர்.;
By : King 24X7 News (B)
Update: 2024-05-22 13:19 GMT
கோப்பு படம்
பீஹார் மாநிலத்தை சேர்ந்தவர் ரோகித் சிங், 30. அவரது நண்பர் குட்டு, 32. செங்கல்பட்டு அடுத்த நெம்மேலி பகுதியில் உள்ள உணவகத்தில் வேலை பார்த்து வருகின்றனர். இருவரும் பீஹாரில் உள்ள தங்கள் வீட்டிற்கு சம்பள பணத்தை அனுப்புவதற்காக செங்கல்பட்டு வந்தனர். செங்கல்பட்டு ராட்டிணம்கிணறு பகுதியில் உள்ள அரசு மதுபானக் கடையில் மது வாங்கி ரயில்வே மேம்பாலம் கீழே அமர்ந்து மது அருந்தி கொண்டிருந்தனர்.
அப்போது, அங்கு வந்த அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் நான்கு பேர், ரோகித் சிங் மற்றும் குட்டுவிடம் இருந்த 15,000 ரூபாய் மற்றும் மொபைல்போன் உள்ளிட்டவற்றை கத்தியைக் காட்டி மிரட்டி பறித்துச் சென்றனர். இதுகுறித்து தகவலறிந்து வந்த செங்கல்பட்டு நகர போலீசார், வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.