சிமென்ட் குழாய் தவறி விழுந்து ஒருவர் பலி

பேராவூரணி அருகே சிமென்ட் குழாய் தவறி விழுந்து ஒருவர் பலியான சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.;

Update: 2024-06-01 08:34 GMT
பலி

பேராவூரணி அருகே உள்ள வாத்தலைக்காடு கிராமத்தில், அண்ணாமலை என்பவருக்கு சொந்தமான தென்னந்தோப்பிற்கு தண்ணீர் செல்லும் வகையில், சிமென்ட் குழாய் பதிப்பதற்காக டிராக்டரில் கொண்டு வந்து பொக்லைன் இயந்திரம் மூலம் இறக்கியுள்ளனர். அப்போது அருகில் நின்று கொண்டிருந்த நாடியம் கிராமத்தை சேர்ந்த நீலமேகம் (36) என்பவர் மேல் சிமெண்ட் குழாய் தவறி விழுந்ததில் பலத்த காயமடைந்து, ஆபத்தான நிலையில் பேராவூரணி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி பலியானார்.

Advertisement

இறந்துபோன நீலமேகம் வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த நிலையில், நான்கு தினங்களுக்கு முன்பு தான் ஊர் திரும்பிய நிலையில் இறந்த சம்பவம் அந்த பகுதியில் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இது குறித்து நீலமேகம் மனைவி விஜயா அளித்த புகாரின் பேரில் பேராவூரணி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து பொக்லைன் ஓட்டுநர் நாடாகாட்டை சேர்ந்த பன்னீர் என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News