மத்திய தொழிற் பாதுகாப்பு படை வீரர் தற்கொலை

விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர் அரக்கோணத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் .

Update: 2024-06-08 08:16 GMT

தற்கொலை செய்து கொண்டவர் 

ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினம் அகனம்பூடி லெமத்தி அக்ரஹாரம் பகுதியை சேர்ந்தவர் நாகேஸ்வரராவ் (39). இவரது மனைவி வெங்கடலட்சுமி. இந்த தம்பதியருக்கு ஒரு மகள், மகன் உள்ளனர். நாகேஸ்வரராவ், அரக்கோணத்தில் உள்ள மத்திய தொழிற் பாதுகாப்பு படை மைய வீரராக இருந்தார்.

இவர் குடும்பத்துடன் அங்குள்ள குடியிருப்பில் வசித்து வந்தார். பள்ளி விடுமுறை என்பதால் மனைவி வெங்கடலட்சுமி மற்றும் குழந்தைகள் ஆந்திர மாநிலத்திற்க்கு சென்றிருந்தனர். நாகேஸ்வர ராவ் மட்டும் வீட்டில் தனியாக இருந்தார்.

நேற்று முன்தினம் இரவு நாகேஸ்வர ராவ் மனைவிக்கு போன் செய்து பேசி கொண்டிருந்தபோது திடீரென போனை சுவிட்ச் ஆப் செய்ததாக கூறப்படுகிறது. உடனே வெங்கடலட்சுமி பலமுைற போன் செய்தும் நாகேஸ்வரராவ் போனை எடுக்கவில்லை. இது குறித்து பக்கத்து வீட்டில் இருந்தவர்களிடம் போனில் தொடர்பு கொண்டு இதனை தெரிவித்துள்ளார்.

அவர்கள் வீட்டிற்கு சென்று பார்த்த போது நாகேஸ்வர ராவ், வீட்டிற்குள் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.

தகவல் அறிந்த தக்கோலம் போலீசார், அரக்கோணம் தாலுகா இன்ஸ்பெக்டர் பழனிவேல் தலைமையில் சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும்,இது குறித்து தக்கோலம் போலீசார் இன்று வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News