வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த பெண்ணிடம் செயின் பறிப்பு
கருங்கல் அருகே வீடு புகுந்து தூங்கிக் கொண்டிருந்த பெண்ணின் செயினை திருடி சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
Update: 2024-04-29 06:15 GMT
கருங்கல் அருகே பாலவிளை பகுதியில் வசித்து வருபவர் மரிய அந்தோணி . மனைவி, மகன், மகள் மற்றும் பேரக்குழந்தை களுடன் வசித்து வருகிறார். மரிய அந்தோணி தினமும் அதிகாலையில் வீட்டின் அருகில் உள்ள டீ கடைக்கு செல்வது வழக்கம். காலையில் டீ குடிக்க சென்றுள்ளார். அப்போது வீட்டின் கதவை பூட்டாமல் சென்றதாக கூறப்படுகிறது. அந்த நேரத்தில் வீட்டில் புகுந்த மர்ம நபர் மரிய அந்தோணியின் பேரக்குழந்தை யின் கையில் கிடந்த தங்க பிரேஸ்லெட்டை திருட முயன்ற போது குழந்தை அழுதுள்ளது.பின்னர் மரிய அந்தோணியின் மனைவி மரிய தங்கத்தின் கழுத்தில் கிடந்த 5 பவுன் செயினை பறித்து விட்டு செல்லும் போது வீட்டில் உள்ளவர்கள் கூச்சலிட் டனர். அதற்குள் அந்த திருடன் அங்கிருந்து தப்பித்துச் சென்றுவிட் டான்.இது குறித்து மரிய அந்தோணியின் மகன் சபின் கருங்கல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் கருங்கல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.