சாமுண்டீஸ்வரி அம்மன் கோயில் பூங்கரக திருவிழா

திருப்பத்தூர் மாவட்டம், பெரியாங்குப்பம் பகுதியில் நடைபெற்ற பிரசித்தி பெற்ற சாமுண்டீஸ்வரி அம்மன் கோயில் பூங்கரக திருவிழாவில் பல்லாயிரக்கணக்கான பெண்கள் மற்றும் பக்தர்கள் அங்கப்பிரதட்சனம் செய்து வழிபாடு பூங்கரகம் கோயில் சென்றடைந்த போது பக்தர்களை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் லேசான தடியடி நடத்தி கலைத்தனர்.;

Update: 2024-02-16 06:56 GMT
திருவிழா 

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த பெரியாங்குப்பம் பகுதியில் பழமை வாய்ந்த சுயம்பு சாமுண்டீஸ்வரி அம்மன் கோயில் உள்ளது. தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத்துறை கட்டுபாட்டில் உள்ள இந்த கோயில் அப்பகுதியில் உள்ள ஏரிகரை அருகே வடக்குபாகத்தில் உள்ளது.

இந்த கோயிலில் மாசிமாத பிறப்பை ஒட்டி நேற்று முன்தினம் மாசி பெருந்திருவிழா துவங்கியது. இந்த விழாவை ஒட்டி கடந்த இரண்டு நாட்களாக அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தப்பட்டு பின்னர் அம்மன் குதிரை வாகனத்தில் எழுந்தருளி திருவீதி உலா வந்து காட்சியளித்தார்.

Advertisement

பின்னர் அம்மன் அழைப்பு விமரிசையாக நடந்தது. நேற்று மூலவருக்கு மகா அபிஷேகம் மற்றும் அலங்காரம், மகா தீபாராதனை நடந்தது. பின்னர் பூந்தேர் ஊர்வலமும். இரவு சிம்ம வாகனத்தில் அம்மன் எழுந்தருள் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். மேலும் பெண்கள் அம்மன் ஊஞ்சல் மரத்தில் பழங்கள் கட்டியும் தங்களது வேண்டுதல்களை சமர்பித்தனர்.

ஆம்பூர், வாணியம்பாடி, திருப்பத்தூர். சென்னை, பெங்களூர். ஆந்திரா மற்றும் கர்நாடகாவை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பொங்கல் வைத்து அம்மன் வழிபட்டனர்.

இதனைத் தொடர்ந்து இன்று பெரியங்குப்பம் கரக கோயில் இருந்து பூங்கரகம் வானவேடிக்கை மற்றும் மேள தாளங்கள் முழங்க ஊர்வலமாக புறப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக சென்று ஏரிக்கரை சாமுண்டீஸ்வரி அம்மன் கோவில் சென்றடைந்தது.

அப்போது வீதிகள் முழுவதும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தங்களின் வேண்டுதல்கள் நிறைவேற அங்கப்பிரதட்சணம் செய்து சிரசு மீது உப்பு, மிளகு,பொறி ஆகியவற்றை போட்டு வழிபட்டனர்.

மேலும் சிரசு ஊர்வலத்தின் போது பக்தர்களை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் லேசான தடியடி நடத்தி கலைத்தனர்.

Tags:    

Similar News