செங்கோட்டை - ஈரோடு ரயில் போக்குவரத்தில் மாற்றம்

செங்கோட்டை - ஈரோடு ரயில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக மதுரை கோட்டம், தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

Update: 2024-02-07 14:17 GMT

  செங்கோட்டை - ஈரோடு ரயில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக மதுரை கோட்டம், தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.  

செங்கோட்டை - ஈரோடு ரயில் போக்குவரத்தில் மாற்றம் சேலம் கோட்டத்தில் ரயில் பாதை பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதன் காரணமாக பிப்ரவரி 9 அன்று மட்டும் செங்கோட்டையில் இருந்து அதிகாலை 5 மணிக்கு புறப்பட வேண்டிய செங்கோட்டை - ஈரோடு முன்பதிவு இல்லாத ரயில் (16846) கரூர் - ஈரோடு ரயில் நிலையங்களுக்கு இடையே பகுதியாக ரத்து செய்யப்படும். மறு மார்க்கத்தில் பிப்ரவரி 9 அன்று மட்டும் ஈரோட்டில் இருந்து மதியம் 02.00 மணிக்கு புறப்பட வேண்டிய ஈரோடு - செங்கோட்டை முன்பதிவில்லாத ரயில் (16845) 45 நிமிடங்கள் காலதாமதமாக மதியம் 02.45 மணிக்கு புறப்படும்.
Tags:    

Similar News