வாக்காளர் சிறப்பு முகாம்கள் தேதி மாற்றம்- மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

Update: 2023-11-15 04:03 GMT

மாவட்ட ஆட்சியர் தங்கவேல் 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

கரூர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறைத் திருத்தம், 2024, பணிகள் மேற்கொள்ளப்படுவது தொடர்பாக வாக்காளர்களாக பதிவு செய்யத் தகுதியுள்ள அனைவரும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் மற்றும் இடமாற்றம் செய்ய ஏதுவாக கரூர் மாவட்டத்தில் 18.11.2023 மற்றும் 19.11.2023 ஆகிய தினங்களில் சிறப்பு முகாம்கள் நடைபெற இருந்தது. இந்நிலையில், தீபாவளி பண்டிகைக்கு விடப்பட்ட அரசு விடுமுறையை ஈடுசெய்வதற்காக 18.11.2023 சனிக்கிழமை அன்று பணிநாளாக தமிழ்நாடு அரசு அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி 18.11.2023 மற்றும் 19.11.2023 ஆகிய தினங்களில் நடைபெற இருந்த சிறப்பு முகாம்கள் 25.11.2023 மற்றும் 26.11.2023 ஆகிய சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் நடைபெற உள்ளது. இச்சிறப்பு முகாம் நாட்களில் பொதுமக்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் மற்றும் இடமாற்றம் செய்ய சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி அமைவிட அலுவலர்களிடம் மனுக்கள் அளித்து பயன்பெறலாம் எனவும், மேலும், https://voters.eci.gov.in, https://voterportal.eci.gov.in என்ற இணையதளங்கள் மற்றும் Voter Helpline என்ற மொபைல் செயலி மூலமாகவும் மனுக்களை அளிக்கலாம் எனவும், மேலும், 17 வயது முடிவுற்றவர்களும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம், அவர்களுக்கு 18 வயது பூர்த்தியடைந்தவுடன் அவர்களது பெயர்கள் வாக்காளர் பட்டியல் சேர்க்கப்படும் என மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் தங்கவேல் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News