பள்ளிபாளையத்தில் போக்குவரத்து மாற்றம்

பள்ளிபாளையத்தில் சுரங்கபாதை வழியாக வாகனங்கள் செல்லும் வகையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

Update: 2024-03-21 03:08 GMT

சுரங்கபாதை

நாமக்கல், பள்ளிபாளையம் பகுதியில் ,மேம்பாலம் அமைக்கும் பணிகள் கடந்த இரண்டரை ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பள்ளிபாளையம் காவல் நிலையம் எதிரே, வாகனங்கள் உள்ளே செல்லும் வகையில் மேம்பால சுரங்கபாதை சாலை அமைக்கப்பட்டுள்ளது. இன்று முதல் சுரங்கபாதை சாலையில் வாகனங்கள் செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சுரங்க சாலையில் கனரக வாகனங்கள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News