கந்தசாமி கோவிலில் தேரோட்டம், ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு

கந்தசாமி கோவிலில் பிரம்மோற்சவத்தின் 7ஆம் நாளான புதன்கிழமை திருத்தேரோட்டம் நடைபெற்றது.

Update: 2024-02-22 05:43 GMT
செங்கல்பட்டு மாவட்டம்,திருப்போரூர் கந்தசாமி கோயிலில் ஆண்டுதோறும் 12 நாள் பிரம்மோற்சவம் நடைபெறும். இந்த ஆண்டும் பிரமோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. பிரம்மோற்சவத்தின் 7ஆம் நாளான புதன்கிழமை திருத்தேரோட்டம் நடைபெற்றது. திருத்தேரோட்டத்தையொட்டி முருகனுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் சிறப்பு பூஜைகளும் நடைபெற்றது. மலர்களால் அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் முருகன் வள்ளி தெய்வானையுடன் வீற்றிருக்க பக்தர்கள் திருத்தேர் வடம் பிடித்து முருகனுக்கு அரோகரா கந்தனுக்கு அரோகரா அரோகரா அரோகரா என்ற கோஷத்தோடு தேரினை இழுத்து சுவாமியை தரிசனம் செய்தனர். 4 மாடவீதிகளை தேர் சுற்றி வர பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு முருகப் பெருமானை தரிசனம் செய்தனர்.ஆன்மீக பக்தர்கள்,கோயில் நிர்வாகம் என ஆங்காங்கே வாகனங்களில் கொண்டு வந்த அன்னதானம், நீர் மோர்,தண்ணீர்,குளிர்பானங்களை வழங்கினர். தேரோட்டத்தை முன்னிட்டு நான்கு மாத வீதிகளிலும் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. தீயணைப்பு வாகனம் தயார் நிலையில் நிறுத்தப்பட்டது.இலவச மருத்துவ முகாம் கோயில் முன் நடத்தப்பட்டது. மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். விழாவிற்கான ஏற்படுகளை இந்து சமய அறநிலைத்துறை உதவி ஆணையர் லட்சுமி காந்த பாரதிதாசன், திருக்கோயில் செயல் அலுவலர் குமரவேல், மேலாளர் வெற்றி,கோயில் பணியாளர்கள், சிவாச்சாரியார்கள்,ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.
Tags:    

Similar News