தாயமங்கலத்தில் மின் ரத தேரோட்ட விழா

பிரசித்தி பெற்ற தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோவிலில் மின் ரத தேரோட்ட விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.

Update: 2024-04-07 11:51 GMT

மின் ரத ஊர்வலம்

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி அருகே உள்ள தாயமங்கலம் கிராமத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு ஶ்ரீ முத்துமாரியம்மன் திருக்கோவிலின் பங்குனி உற்சவ பெருவிழாவை முன்னிட்டு மின் ரத தேரோட்ட விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இவ்விழா கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்று வருகிறது. இவ்விழாவில் எட்டாம் திருநாள் மின் ரதம் பவனி நடைபெற்றது. முன்னதாக உற்சவர் விநாயகப் பெருமான் சிறப்பு அலங்காரத்தில் சிறிய தேரில் எழுந்தருளினார்.

தொடர்ந்து முத்துமாரியம்மன் சர்வ அலங்காரத்தில் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட மின் ரதத்தில் எழுந்தருளினார். தொடர்ந்து தெய்வங்களுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று, கற்பூர ஆராதனை காண்பிக்கப்பட்டன. பின்னர் மங்கள வாத்தியங்களுடன் ஏராளமான பக்தர்கள் புடைசூழ மின் ரதம் திருக்கோயிலை சுற்றி வலம் வந்தது. ஏராளமான பக்தர்கள் ஓம் சக்தி என்ற கோசத்துடன் மின் ரதத்தை வடம் பிடித்து இழுத்துச் சென்றனர். மின் ரதத்தில் பவனி வந்த முத்துமாரி அம்மனை ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர்.

Tags:    

Similar News