கூத்தாண்டவர் கோவிலில் தேர் திருவிழா!
கூத்தாண்டவர் கோவிலில் தேர் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
Update: 2024-05-01 13:37 GMT
ராணிப்பேட்டை மாவட்டம் திமிரி அருகே உள்ள வரகூர் கிராமத்தில் கூத்தாண்டவர் கோவிலில் தேர் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. கோவிலின் முன்பு காலையில் தீமிதி திருவிழா நடைபெற்றது. பின்னர் நல்ல தண்ணீர் குளத்திலிருந்து குழந்தை வரம் வேண்டி விரதம் இருந்த பெண்களுக்கு எலுமிச்சம் பழம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து அலங்கரித்து வைக்கப்பட்ட கூத்தாண்டவர் சிலையை ஊர்வலமாக எடுத்து வந்து தேரில் அமரவைத்து, மலர்களை கொண்டு அலங்கரிக்கப்பட்ட தேரினை பக்தர்கள் வடம் பிடித்து முக்கிய விதிகள் வழியாக இழுத்துச் சென்றனர். தங்கள் வீட்டு முன்பு தேர் வந்தபோது பக்தர்கள் சுவாமிக்கு மாலை அணிவித்து, கற்பூர தீபாரதனை காட்டினர். பின்னர் தேர் கோவிலை வந்தடைந்தது.விழாவில் ஊர் நாட்டாண்மை தாரர்கள் ஊர் பொதுமக்கள் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.