மாரியம்மன் கோவிலில் தேர் திருவிழா
கரையாம்பாளையம் மாரியம்மன் கோவில் தேர் திருவிழாவில் சுற்று வட்டார கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Update: 2024-02-26 03:54 GMT
ரிஷிவந்தியம் அடுத்த கரையாம்பாளையம் கிராமத்தில் மாரியம்மன் கோவில் தேர் திருவிழா நடந்தது. விழா கடந்த 16ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் சுவாமிக்கு சிறப்பு பூஜை, இரவில் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா மற்றும் ஊரணி பொங்கல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன. நேற்று முன்தினம் மாலை தேர்திருவிழா நடந்தது. இதையொட்டி சுவாமிக்கு பால், தயிர், இளநீர், தேன், சந்தனம் உள்ளிட்ட 16 வகையான பொருட்களை கொண்டு அபிேஷகம் செய்யப்பட்டு, சிறப்பு பூஜை நடந்தது. பின், உற்சவர் விநாயகர் மற்றும் சுயம்பு மாரியம்மன் சுவாமிகளை தேரில் எழுந்தருளச் செய்து ஏராள மான பக்தர்கள் வடம் பிடிக்க தேரோட்டம் நடந்தது. விழாவில், சுற்று வட்டார பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.