திருப்பதிசாரம் திருவாழ்மார்பன் கோவிலில் தேரோட்டம்
கன்னியாகுமரி மாவட்டம், திருப்பதிசாரம் திருவாழ்மார்பன் கோவிலில் தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
108 வைணவ திருத்தலங்களில் ஒன்றான கன்னியாகுமரி மாவட்டம், திருப்பதிசாரம் திருவாழ்மார்பன் கோவிலில் பத்து நாட்கள் சித்திரை திருவிழா கடந்த 14ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து தினசரி சிறப்பு பூஜை, அபிஷேகம்,நடைபெற்றது. ஒன்பதாம் திருவிழாவான இன்று 22ஆம் தேதி காலை 9:15 மணிக்கு மேல் 10 .15 மணிக்குள் திருத்தேர்வடம் பிடித்து தேரோட்டம் நடந்தது. சுவாமி தேருக்கு எழுந்தருளியதும் சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. அதன் பிறகு பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்தனர்.
இந்த நிகழ்ச்சியில் நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ், தளவாய் சுந்தரம் எம்எல்ஏ, ஆரல்வாய்மொழி பேரூராட்சி தலைவர் முத்துக்குமார், அதிமுக மாவட்ட இணைச்செயலாளர் சாந்தினி பகவதியப்பன், திமுக மாவட்ட துணைச் செயலாளர் பூதலிங்கம் உட்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து பகல் 12 மணிக்கு அன்னதானமும், மாலை 5 மணிக்கு மண்டகப்படியும், இரவு 10 மணிக்கு கருட ரிஷப வாகனத்தில் வீதி உலாவும், சப்த வர்ணம், பள்ளி வேட்டையும் நடைபெறுகிறது. பத்தாம் திருவிழாவான நாளை 23ஆம் தேதி மாலை 5 மணிக்கு சுவாமி கருட வாகனத்தில் வீதி உலா, 6 மணிக்கு ஆராட்டு, இரவு 8 மணிக்கு திருக்கொடி இறக்கம், பூஜை ஆகியவை நடக்கிறது.