மண்டல பூஜையை முன்னிட்டு ரத ஊர்வலம்
திண்டுக்கல் மலையடிவார ஐயப்ப சுவாமி கோயில் மண்டல பூஜை விழாவின் ஒரு பகுதியான சுவாமி ரத ஊர்வலத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்;
Update: 2023-12-28 08:09 GMT
மண்டல பூஜையை முன்னிட்டு ரத ஊர்வலம்
திண்டுக்கல் மலையடிவாரத்தில் அமைந்துள்ள ஐயப்பன் கோயில் மண்டல பூஜை டிச.24 ல் தொடங்கியது. அன்று காலையில் புஷ்பாஞ்சலி தொடங்கி உஞ்சி விருத்தி நடந்த நிலையில் நேற்று முன்தினம் கணபதி ஹோமத்தோடு வழிபாடுகள் தொடங்கியது. கோயிலில் உள்ள கம்பத்தடி விநாயகர், மஞ்சள் மாதா, நாகராஜா, கருப்பண சுவாமி கடுத்தசாமி, சர்வசித்தி கோட்டை விநாயகருக்கு விேசஷ பூஜைகள் , பஜனை, சரணகோஷங்களோடு கூட்டு வழிபாடு நடந்தது. நேற்று அன்னதானத்திற்கு பின் மாலை 6 :00மணிக்கு சாயரட்சை பூஜை நடந்தது.7 :00மணிக்கு ஐயப்ப சுவாமி புறப்பாடு நடைபெற்றது.