திருமழிசை ஜெகந்நாத பெருமாள் கோவில் தேரோட்டம்

கோவிந்தா கோஷம் முழங்க திருமழிசை ஜெகந்நாத பெருமாள் கோவில் தேரோட்டம் வெகுவிமர்சையாக நடைபெற்றது.

Update: 2024-01-29 05:53 GMT

தேரோட்டம்

திருமழிசையில் அமைந்துள்ள ஜெகந்நாத பெருமாள் மற்றும் திருமழிசை ஆழ்வார் கோவிலில், திரு அவதார மகோற்சவ திருவிழா, கடந்த 19-ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து 10 நாட்கள் நடந்த விழாவில், உற்சவர் ஜெகந்நாத பெருமாள் காலை, மாலை என இரு வேளைகளில், பல்வேறு வாகனங்களில் எழுந்தருளினார். முக்கிய நிகழ்வான தேரோட்டம், நேற்று நடந்தது. காலை 7:00 மணிக்கு, தேரில் திருமழிசை ஆழ்வார் எழுந்தருளினார்.

காலை 9:00 மணிக்கு, பக்தர்கள் 'கோவிந்தா... கோவிந்தா...' என கோஷமிட்டபடி, வடம் பிடித்து தேர் இழுத்தனர். பெண்கள், பாடல் பாடி, கோலாட்டம் ஆடிச் சென்றனர். நான்கு வீதிகள் வழியாக வலம் வந்த தேர், மதியம் 12:30 மணிக்கு, கோவிலை வந்தடைந்தது. பாதுகாப்பு ஏற்பாடுகளை, வெள்ளவேடு போலீசார் செய்திருந்தனர். விழா ஏற்பாடுகளை ஹிந்து சமய அறநிலையத்துறையினர் செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News