துரத்திய யானை-தெறித்தோடிய பக்தர்கள்!

கோவை மாவட்டம் வெள்ளிங்கிரி பகுதியில் ஒற்றை யானை துரத்தியதால் அலறி அடித்து பக்தர்கள் ஓடினர்.

Update: 2024-03-15 16:30 GMT

கோவை மாவட்டம் வெள்ளிங்கிரி பகுதியில் ஒற்றை யானை துரத்தியதால் அலறி அடித்து பக்தர்கள் ஓடினர்.


கோவை மாவட்டம் ஆலந்துறை அடுத்து பூண்டி பகுதியில் வெள்ளிங்கிரி ஆண்டவர் கோவில் அமைந்துள்ளது.மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் இக்கோவில் அமைந்துள்ளதால் அருகில் உள்ள வனப்பகுதியில் இருந்து வனவிலங்குகள் இக்கோவிலை கடந்து செல்வது வழக்கம். இந்நிலையில் நேற்று வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றை ஆண் யானை ஒன்று கார் நிறுத்தம் அருகே வந்தபோது அங்கிருந்த பக்தர்கள் யானையை புகைப்படம் எடுப்பதில் குறியாக இருந்தனர்.அப்போது யானை திடீரென பக்தர்களை துரத்தியதால் அங்கிருந்தவர்கள் அலறி அடித்துக்கொண்டு ஓடினர்.மேலும் கார்களுக்கு இடையே ஒளிந்து கொண்டதால் பக்தர்கள் உயிர் தப்பினர். இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் அளித்ததை தொடர்ந்து மலை அடிவாரத்தில் பாதுகாப்பணியில் இருந்த வனத்துறையினர் அங்கு வந்து ஒற்றை ஆண் காட்டு யானையை வனப்பகுதிக்குள் விரட்டி அடித்தனர்.

இதுகுறித்து பக்தர்கள் கூறுகையில் வனப்பகுதி ஒட்டி கோயில் அமைந்துள்ளதால் இரவு நேரங்களில் வனப்பணியாளர்கள் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் யானை உள்ளிட்ட வனவிலங்குகள் கோவில் பகுதிக்கு வந்தால் உடனடியாக அங்கிருந்து விரட்ட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். வனத்துறையினர் கூறுகையில் தற்போது கோடை காலம் என்பதால் இரவு நேரங்களில் தண்ணீர் தேடி யானைகள் வனப்பகுதியில் இருந்து வெளியேறுகிறது மலையடிவாரத்தில் உள்ள கிராம மக்களும் பூண்டி வெள்ளிங்கிரி ஆண்டவர் கோவிலுக்கு வரும் பக்தர்களும் மிகவும் ஜாக்கிரதையாக வர வேண்டும் எனவும் பக்தர்கள் வனப்பகுதி ஓட்டிய பகுதிகளுக்கு யாரும் செல்லக்கூடாது என எச்சரிக்கை கொடுத்துள்ளனர்.

Tags:    

Similar News