சாத்தனூர் அணைக்கு சுற்றுலா பயணிகள் வருகை மிக குறைவு

சுற்றுலா பயணிகளின் குறைந்த வருகையால் பல இடங்கள் வெறிச்சோடி காணப்பட்டது

Update: 2023-12-12 02:44 GMT

சாத்தனூர் அணைக்கு சுற்றுலா பயணிகள் வருகை மிக குறைவு

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
திருவண்ணாமலை மாவட்டத்தில் மிகவும் புகழ்பெற்ற சுற்றுலாத்தலமாக விளங்குவது சாத்தனூர் அணை. 119 அடி உயரம் கொண்ட இந்த அணையில் தண்ணீர் நிரம்பினால் திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் உள்ள ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களில் விவசாயம் நடைபெறும். அதன்படி இந்தாண்டு தண்ணீர் நிரம்பி அணை திறக்கப்பட்டது. இதனால் அணையின் நீர்மட்டம் 100 அடியாக இருந்தது. கிருஷ்ணகிரி அணையில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீர் மற்றும் சாத்தனூர் அணை சுற்றுவட்டார பகுதியில் பெய்த மழையால் அணைக்கு வினாடிக்கு 250 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் சாத்தனூர் அணையின் நீர்மட்டம் 117.30 அடியாக மீண்டும் உயர்ந்தது. இந்நிலையில் சாத்தனூர் அணைக்கு வழக்கமாக ஞாயிறு உள்பட விடுமுறை நாட்கள், விசேஷ நாட்கள், கோடை காலங்களில் அதிகளவு சுற்றுலா பயணிகள் வருவார்கள். ஆனால் ஞாயிற்றுக்கிழமையான நேற்று வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மழை அறிகுறி தென்பட்டதால் அணைக்கு குறைந்த அளவிலான சுற்றுலாப்பயணிகளே வந்தனர். இதனால் பெரும்பாலான இடங்கள் வெறிச்சோடி காணப்பட்டது.
Tags:    

Similar News