செங்கல்பட்டு : பழங்குடியின மக்களுக்கு புதிய வீடு கட்டுவதற்கான பூமிபூஜை
நெல்வாய் ஊராட்சியில் உள்ள பழங்குடியினருக்கு தமிழ்நாடு அரசு கலைஞர் இலவச வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் புதிய வீடுகள் கட்டுவதற்கான பூமி பூஜை நடைபெற்றது.;
By : King Editorial 24x7
Update: 2023-10-27 15:47 GMT
பழங்குடியின மக்களுக்கு புதிய வீடுகள் கட்ட பூமிபூஜை
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் ஊராட்சி ஒன்றியம் நெல்வாய் ஊராட்சியில் உள்ள பழங்குடியினருக்கு தமிழ்நாடு அரசு கலைஞர் இலவச வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் பழங்குடியினர் 18 பேருக்கு ரூபாய் மூன்று லட்சம் மதிப்பீட்டில் வீடுகள் கட்டுவதற்கான பூமி பூஜை போடும் நிகழ்ச்சி ஒன்றிய செயலாளர் படாளம் சத்யசாய் தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக காஞ்சி தெற்கு மாவட்ட கழக செயலாளர் க .சுந்தர் எம்.எல்.ஏ கலந்து கொண்டு பூமி பூஜை போடும் பணியை தொடங்கி வைத்து இனிப்புகள் வழங்கினார். இதில் ஊராட்சி மன்ற தலைவர் சாந்திபொன்னுரங்கம் ஒன்றிய துணை செயலாளர் தனசேகர், ஆறுமுகம் உள்ளிட்ட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.