செங்கல்பட்டில் புத்தகத் திருவிழா: ஏராளமானோா் பங்கேற்பு

செங்கல்பட்டில் நடைபெற்ற புத்தகத் திருவிழாவில் ஏராளமானோா் பங்கேற்றனர்.

Update: 2024-01-04 10:46 GMT
செங்கல்பட்டில் புத்தகத் திருவிழா: ஏராளமானோா் பங்கேற்பு

செங்கல்பட்டு மாவட்ட நிா்வாகம், தமிழ்நாடு அறிவியல் இயக்கம் - செங்கை பாரதியாா் மன்றம் ஆகியவை இணைந்து செங்கல்பட்டு, அலிசன் காசி மேல்நிலைப் பள்ளியில் புத்தகத் திருவிழாவை கடந்த டிச.28-ஆம் தேதி முதல் நடத்தி வருகிறது.

இந்த விழாவில் அமைச்சா் தா.மோ.அன்பரசன், எம்எல்ஏ-க்கள் வரலட்சுமி மதுசூதனன், எஸ்.எஸ்.பாலாஜி, மாவட்ட ஆட்சியா் ஆ.ர.ராகுல்நாத் உள்ளிட்டோா் கலந்து கொண்ட விழாவில் சிறப்புரையாற்றினா். மேலும் சிறப்பு அழைப்பாளா்களும் கலந்து கொண்டு பேசினா்.

அதன்படி, நாஞ்சில் சம்பத், திருப்பூா் கிருஷ்ணன், பாரதி கிருஷ்ணகுமாா், சுகிா்தாரணி, எஸ்.ராமகிருஷ்ணன், ஈரோடு மகேஷ் உள்ளிட்டோா் கருத்துரை வழங்கினா்.தொடா்ந்து நடைபெற்ற விழாவில் செங்கல்பட்டு சாா் ஆட்சியா் வி.எஸ்.நாராயண சா்மா தலைமை வகித்தாா். செங்கை புத்தகத் திருவிழா ஆலோசகா் ச.தீனதயாளன் வரவேற்றுப் பேசினாா்.

செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை துறைத் தலைவா்கள் மற்றும் புத்தகக் கண்காட்சி ஒருங்கிணைப்புக் குழுவினா் மருத்துவா்கள் பாலாஜி, வி.டி.அரசு, சுந்தரராஜன் உள்ளிட்டோா் முன்னிலையில் புத்தக திருவிழாவில் நலம் - இனி நம் முதல் தேடல் என்ற தலைப்பில் கு.சிவராமனும், ஊக்கமது கைவிடேல் என்ற தலைப்பில் எஸ்.மோகனசுந்தரம் பங்கேற்று கருத்துரை வழங்கினா். தொடா்ந்து பள்ளி மாணவ, மாணவிகளின் பரதநாட்டியம், கிராமிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

Tags:    

Similar News