செங்கல்பட்டு மாவட்ட கண்காணிப்பு அலுவலர் திடீர் ஆய்வு
செங்கல்பட்டு மாவட்ட கண்காணிப்பு அலுவலர் திடீர் ஆய்வு செய்தார்.
செங்கல்பட்டு அடுத்த அஞ்சூர் ஊராட்சியில், அரசு மாதிரி பள்ளியில் உள்ள ஸ்மார்ட் வகுப்பறை மற்றும் கணினி ஆயவகம், சுற்றுச்சுவர்களை, மாவட்ட கண்காணிப்பு அலுவலர் சமயமூர்த்தி, நேற்று ஆய்வு செய்தார். ஆய்வின் போது, கலெக்டர் அருண்ராஜ் உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர். அ
தன்பின், ஆத்துாரில் சிறார்களுக்கான பாதுகாப்பு இல்லம், 15 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டு வருகிறது. வில்லியம்பாக்கம் ஊராட்சியில், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் சார்பில் செயல்படும், அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் உள்ளிட்ட பல்வேறு பணிகளை, மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு செய்தார்.
தொடர்ந்து, செங்கல்பட்டு மாவட்ட மக்கள் குறை தீர்க்கும் கூட்ட அரங்கில், அனைத்து துறை பணிகள் குறித்த ஆய்வு கூட்டம், கலெக்டர் அருண்ராஜ் தலைமையில் நடந்தது. மாவட்ட கண்காணிப்பு அலுவலர் சமயமூர்த்தி பங்கேற்று, ஆலோசனைகள் வழங்கினார். அப்போது, லத்துார், சித்தாமூர் ஊராட்சி ஒன்றியங்களில் நடக்கும் திட்டப்பணிகளில் தனி கவனம் செலுத்தி, பணிகளை முழுமையாக முடிக்க வேண்டும் என, ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகளுக்கு, கண்காணிப்பாளர் உத்தரவிட்டார்.
மாமல்லபுரம் பேரூராட்சி பகுதியில், ஹோட்டல்களில் இருந்து வெளியேற்றப்படும் குப்பையை முறையாக அகற்ற, பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்களிடம் கட்டணம் வசூலிக்க வேண்டும். உள்ளாட்சி அமைப்புகளில், குடிநீர் பணிகளை தினமும் கண்காணித்து, பொதுமக்களுக்கு சீரான குடிநீர் வினியோகம் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.பழங்குடியினர் ஜாதி சான்றிதழ் மற்றும் பள்ளி, கல்லுாரிக்கு சேரும் மாணவர்களுக்கு,
ஜாதி சான்றிதழ்களை உடனடியாக வழங்க, செங்கல்பட்டு சப்- கலெக்டர், மதுராந்தகம், தாம்பரம் வருவாய் கோட்டாட்சியர்கள் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கலெக்டர் உத்தரவிட்டார். பதிவுத்துறையில் பதிவு செய்பவர்களுக்கு, இணையதளம் வழியாக பட்டா வழங்கும் விபரங்கள் குறித்து, பத்திர பதிவு அலுவலகங்களில் அறிவிப்பு பலகை வைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு பணிகள் குறித்து, அதிகாரிகளுக்கு, கண்காணிப்பு அலுவலர் அறிவுரை வழங்கினார்.
இதில், கூடுதல் கலெக்டர் அனாமிகா, தாம்பரம் மாநகராட்சி கமிஷனர் அழகுமீனா, எஸ்.பி., சாய் பிரணீத், மாவட்ட வருவாய் அலுவலர் சுபா நந்தினி, சப்- - கலெக்டர் நாராயணசர்மா, வேளாண்மை இணை இயக்குனர் அசோக் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.