சென்னை: 3 மண்டலங்களில் குடிநீர் வினியோகம் நிறுத்தம்

குடிநீர் குழாய் இணைப்பு பணிகள் நடைபெறுவதால் வரும் 23- ந் தேதி காலை 6 மணி முதல் 24-ந் தேதி காலை 6 மணி வரை தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், அடையாறு ஆகிய 3 மண்டலங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் குழாய்கள் மூலம் வழங்கப்படும் குடிநீர் வினியோகம் நிறுத்தம் செய்யப்படுவதாக குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம் தெரிவித்துள்ளது.

Update: 2024-01-22 03:05 GMT

பைல் படம் 

சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:- சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தால் தேனாம்பேட்டை வெங்கட் நாராயண சாலை மற்றும் சேமியர்ஸ் சாலையில் குடிநீர் குழாய் இணைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எனவே, வரும் 23- ந் தேதி காலை 6 மணி முதல் 24-ந் தேதி காலை 6 மணி வரை தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், அடையாறு ஆகிய 3 மண்டலங்க ளுக்கு உட்பட்ட பகுதிகளில் குழாய்கள் மூலம் வழங்கப்படும் குடிநீர் வினியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. எனவே, பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக வேண்டிய அளவு குடிநீரை சேமித்து வைத்துகொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது. அவசர தேவைகளுக்கு லாரிகள் மூலம் குடிநீர் பெற்றுக்கொள்ள வாரியத்தின் https://cmwssb.tn.gov.in என்ற இணையத்தில் பதிவு செய்து கொள்ளலாம். குடிநீர் இணைப்பு இல்லாத பகுதிகள் மற்றும் தெரு நடைகளுக்கு லாரிகள் மூலம் வழங்கப்படும் குடிநீர் வினியோகம் எந்த தடையுமின்றி வழக்கம்போல் சீரான முறையில் மேற்கொள்ளப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News