சென்னகேசவப்பெருமாள் சித்திரை தேர் திருவிழா
சங்கரி :சென்னகேசவப் பெருமாள் சித்திரை தேர் திருவிழா ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருத்தேர் வடம் பிடித்து இழுத்தனர்...;
Update: 2024-04-23 16:29 GMT
சித்திரை தேர் திருவிழா
சேலம் மாவட்டம், சங்ககிரி அருள்மிகு சென்னகேசவப்பெருமாள் சித்திரைத் தேர்த்திருவிழாயொட்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருத்தேர் வடம்பிடித்து இழுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.... சங்ககிரி மலை மீது உள்ள அருள்மிகு சென்னகேசவப்பெருமாள் சித்திரை தேர்த்திருவிழா கடந்த 15ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதனை தொடர்ந்து சுவாமி மலையிலிருந்து நகருக்கு எழுந்தருளினார். அதனையடுத்து சுவாமிக்கு தங்கும் மண்டபத்தில் தினந்தோறும் சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்று பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்தார். இதனையடுத்து 9வது நாளான இன்று அருள்மிகு சென்னகேசவப்பெருமாள் உடனமர் ஸ்ரீதேவி, பூதேவி சுவாமிகள் திருத்தேரில் எழுந்தருளினர். இதனை அடுத்து திமுக சேலம் மேற்கு மாவட்ட செயலாளரும் சேலம் பாராளுமன்ற வேட்பாளருமான டி.எம். செல்வகணபதி திருத்தேரை வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தார். அதனையடுதது பம்பை செண்டை மேலங்கள் முழங்க தேரினை சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருத்தேரினை வடமடித்து பிடித்து இழுத்து தங்களது நேர்த்தி கடனை செலுத்தினர்.