சமர்த் திட்ட தொழிலாளர் பயிற்சி மையங்களுக்கு காசோலை

Update: 2023-12-13 02:20 GMT
பயிற்சி மையங்களுக்கு காசோலை 
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

திருப்பூர் :சமர்த் திட்டத்தில் தொழிலாளர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கிய நிறுவனங்களுக்கு காசோலை ஏற்றுமதியாளர்கள் சங்கத்தில் வழங்கப்பட்டது.

மத்திய அரசின் ஜவுளித்துறை அமைச்சகத்தின் கீழ் பல்வேறு திறன் மேம்பாட்டு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதில் சமர்த் திட்டமும் ஒன்று. இந்த திட்டத்தின் கீழ் திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம் 8 ஆயிரத்து 500 தொழிலாளர்களை புதியதாக திறன் மேம்பாட்டை செய்வதற்கான ஒதுக்கீட்டை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பெற்றது. கடந்த ஒரு ஆண்டுகளாக இந்த பயிற்சிகள் தீவிரமாக தமிழகம் எங்கும் உள்ள திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் சார்பில் இயங்கும் பயிற்சி மையங்கள் வாயிலாக நடந்தது. 115 மையங்களில் இந்த பயிற்சி நடந்து வந்தது. இதன் மூலம் இதுவரை 5510 புதிய தொழிலாளர்கள் பயிற்றுவிக்கப்பட்டு திறன் பெற்றிருக்கிறார்கள். இந்த திறன் பயிற்சியை வழங்கிய திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் சார்பில் இயங்கும் நிறுவனங்களுக்கு இரண்டாம் கட்ட பயிற்சி தொகை வழங்கும் நிகழ்ச்சி ஏற்றுமதியாளர்கள் சங்கத்தில் உள்ள டாக்டர் பத்மஸ்ரீ ஆ.சக்திவேல் அரங்கில் நடைபெற்றது.

இதில் மையத்தின் பொறுப்பாளர்களிடம் ரூ.82 லட்சத்து 50 ஆயிரத்துக்கான காசோலை வழங்கப்பட்டது. இதில் சமர்த் கமிட்டியின் தலைவர் சக்திவேல் வரவேற்று பேசினார். இதன் பின்னர் திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் கே.எம்.சுப்பிரமணியன் சமர்த் திட்டத்தின் மாண்புகளை குறித்து விளக்கி பேசினார். மேலும், சமர்த் திட்டத்தின் பயனாளிகள் அனைவரையும் வாழ்த்தி திட்டங்களை ஒருங்கிணைத்து செயல்படுத்தக்கூடிய அனைத்து பங்குதாரர்களுக்கும் நன்றி தெரிவித்து, இந்த திட்டம் மேலும் மத்திய அரசாங்கத்தின் மேலும் அதிக ஒதுக்கீடுகளை பெற்று சிறப்பாக செயல்படுத்தக்கூடிய சாத்தியங்களை பற்றி எடுத்து கூறினார். இதன் பின்னர் சங்க பொருளாளர் கோபாலகிருஷ்ணன், இணைச்செயலாளர் குமார் துரைசாமி ஆகியோர் பேசினர். இதனைத்தொடர்ந்து கவுரவ தலைவர் சக்திவேல் பேசினார்.

Tags:    

Similar News