தேர்தல் பணிக்குழு சார்பில் இல்லம் தோறும் ஸ்டாலினின் குரல் பிரச்சாரம்

இல்லம் தோறும் ஸ்டாலினின் குரல் நோட்டீசை வழங்கிய சட்டமன்ற உறுப்பினர் ஜோதி.

Update: 2024-03-05 18:02 GMT

இல்லம்தோறும் ஸ்டாலின் குரல் பிரச்சாரம்

செய்யாறு அருகே வெம்பாக்கம் கிழக்கு ஒன்றியம் சுருட்டல் கிராமத்தில் தேர்தல் பணிக்குழு வாக்குச்சாவடிகளில் சார்பில் இல்லம் தோறும் ஸ்டாலினின் குரல் பிரச்சாரத்திற்காக நோட்டீசை செய்யாறு சட்டமன்ற உறுப்பினர் ஒ.ஜோதி வீடு வீடாக சென்று வழங்கினார். 

திமுக ஆட்சியின் இரண்டரை ஆண்டு சாதனைகளை பொதுமக்களுக்கு எடுத்துரைத்து திண்ணை பிரச்சாரம் செய்தார். நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பார்வதி சீனிவாசன் வெம்பாக்கம் ஒன்றிய குழு பெருந்தலைவர் மாமண்டூர் D.ராஜி ஒன்றிய கழக செயலாளர்கள் N.சங்கர் ,M.தினகரன் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் தெய்வமணி மற்றும் திமுக கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News