செய்யாற்றைவென்றான் பள்ளியில் ஆண்டு விழா கொண்டாட்டம்

பள்ளி ஆண்டு விழாவில் சிறப்பு நினைவு பரிசுகள் வழங்கி கவுரவிப்பு

Update: 2024-02-24 19:12 GMT

பள்ளி ஆண்டு விழா

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே செய்யாற்றை வென்றான் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஆண்டு விழா நடைபெற்றது.

விழாவில் பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள், சத்துணவு அமைப்பாளர், சமையலர், சமையல் உதவியாளர், காலை உணவு சமையலர், பள்ளி தூய்மை காவலர்கள், இல்லம் தேடி கல்வி ஆசிரியர் மற்றும் அங்கன்வாடி குழந்தைகள , அங்கன்வாடி ஆசிரியர், சமையலர், செய்யாற்றை வென்றான் மோட்டூர் மாணவர்கள், ஆசிரியர்கள், சத்துணவு அமைப்பாளர், சமையலர், உதவியாளர், பள்ளி தூய்மையாளர், இல்லம் தேடி கல்வி ஆசிரியர் என அனைவருக்கும் அவர்களின் திறனை ஊக்கபடுத்த ஊராட்சி மன்ற தலைவர் சிறப்பு பரிசுகளை வழங்கினார்.

Tags:    

Similar News