திருப்பூரில் நாட்டுக்கோழி வளர்ப்பு வளாக பயிற்சி

திருப்பூரில் நாட்டுக்கோழி வளர்ப்பு எனும் தலைப்பில் உள் வளாகப் பயிற்சி நாளை நடைபெறவுள்ளது.

Update: 2024-06-18 12:44 GMT

நாட்டு கோழி வளர்ப்பு

திருப்பூர் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம், திருப்பூர் கால்நடை பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தின் முதல்வர்  அரங்க மதிவாணன் நேற்று கூறியிருப்பதாவது: திருப்பூர் மத்திய பேருந்து நிலையம் எதிரில் உள்ள, கால்நடை பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் நாளை (ஜூன் 20)  காலை 10 மணிக்கு,  நாட்டுக்கோழி வளர்ப்பு எனும் தலைப்பில், உள் வளாகப் பயிற்சி நடைபெறுகிறது. விவசாயிகள் பங்கேற்று தங்களுக்கு நாட்டுக்கோழி வளர்ப்பு தொடர்பான சந்தேகங்களை கேட்டு பயன்பெறலாம். மேலும் விவரங்களுக்கு 0421-2248524 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News