கள்ளக்குறிச்சி:நவீன கட்டட தொழில்நுட்ப கண்காட்சி

கண்காட்சி

Update: 2024-12-22 04:39 GMT
கள்ளக்குறிச்சியில் 'பில்ட் எக்ஸ்போ' நவீன கட்டட தொழில்நுட்ப கண்காட்சி துவங்கியது. கள்ளக்குறிச்சி வி.ஏ.எஸ்., மகாலில் சிவில் இன்ஜினியர்ஸ் அசோசியேஷன் சார்பில் நவீன கட்டட தொழில்நுட்ப கண்காட்சி நடந்து வருகிறது. இதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற அ.தி.மு.க., மாவட்ட செயலாளர் குமரகுரு வாழ்த்திப் பேசினார். கள்ளக்குறிச்சி மாவட்ட சிவில் இன்ஜினியர்ஸ் அசோசியேஷன் சேர்மனான, எக்ஸ்போ தலைவர் சுரேஷ்பாபு தலைமை தாங்கினார். செயலாளர்கள் அருண்குமார், ரவி, பொருளாளர் பாலசுப்ரமணியன் முன்னிலை வகித்தனர். இணை சேர்மன் நக்கீரன் வரவேற்றார். முன்னாள் அமைச்சர் மோகன், தொகுதி எம்.எல்.ஏ., செந்தில்குமார், கள்ளக்குறிச்சி மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் கார்த்திகேயன்.முன்னாள் எம்.எல்.ஏ., பிரபு, அ.தி.மு.க., மாநில மருத்துவரணி நிர்வாகி பொன்னரசு, மாவட்ட ஜெ., பேரவை செயலாளர் ஞானவேல், வழக்கறிஞரணி சீனிவாசன், நகர செயலாளர் பாபு, நெல் அரிசி ஆலைகள் சங்க நிர்வாகி முத்துசாமி, டி.எஸ்.எம்., கல்வி நிறுவன தலைவர் மனோகர்குமார், முருகா பாலிடெக்னிக் தலைவர் ரகமத்துல்லா ஆகியோர் கட்டுமான தொழில்நுட்பத்தின் வளர்ச்சியை கள்ளக்குறிச்சியில் அமைத்த சிவில் இன்ஜினியர்களுக்கு பாராட்டுக்கள் தெரிவித்தனர்.

Similar News