சின்னசேலம் அடுத்த பெரியசிறுவத்துார் கிராமத்தை சேர்ந்தவர் முனியன் மகன் நடேசன், 60; இவர் நேற்று பகல் 2 மணி அளவில் பெரியசிறுவத்தூலிருந்து - ஈரியூர் நோக்கி தனது சைக்கிளில் சென்றார். அப்போது பின்னால் கள்ளக்குறிச்சி நோக்கி சென்ற தடம் எண் 6 பி எண் கொண்ட டவுன் பஸ் நடேசன் ஓட்டி சென்ற சைக்கிள் மீது மோதியுள்ளது.இதில் டவுன் பஸ்ஸின் பின்பக்க டயரில் சிக்கிய நடேசன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். தகவலறிந்த சின்னசேலம் போலீசார் சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்று அவரது உடலை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். புகாரின் பேரில் சின்னசேலம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.