சிதம்பரம் மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் வேட்புமனு தாக்கல்
சிதம்பரம் மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.
Update: 2024-03-26 11:35 GMT
அரியலூர் மாவட்டம் சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் பி.கார்த்தியாயினிவேட்பு மனுவை சிதம்பரம் மக்களவைத் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரும், அரியலூர் ஆட்சியருமான ஜா.ஆனிமேரி ஸ்வர்ணாவிடம் செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்தார். உடன் பாஜக மாவட்டத் தலைவர் அய்யப்பன்,பாமக மாவட்டச் செயலர் காடுவெட்டி ரவி, வன்னியர் சங்க துணைத் தலைவர் வைத்தி உள்ளிட்டோர் உடனிருந்தனர். பின்னர் கார்த்தியாயினி செய்தியாளர்களிடம் கூறியதாவது: நான் வெற்றிப் பெற்றால் சிதம்பரம் தொகுதியில் அடிப்படை வசதிகள் மேம்பத்தப்படும். காலாவதியான சுண்ணாம்புக் கல் சுரங்கங்களை ஏரி, குளங்களாகவும் அல்லது விளையாட்டு திடலாகவும் மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.அயோத்தி ராமரை தரிசிக்க விரும்புவோர்களுக்கு இலவசமாக அழைத்துச் செல்ல நடவடிக்கை எடுப்பேன். தொழில்நுட்ப பூங்கா அமைக்கப்படும். அரியலூரில் அனைத்து ரயில்களும் நின்றுச் செல்ல நடவடிக்கை எடுப்பேன் என்றார்.