மக்களுடன் முதல்வர் முகாம்: எம்எல்ஏ தொடங்கி வைப்பு

மக்களுடன் முதல்வர் முகாம் பென்னாகரம் சட்டமன்ற உறுப்பினர் ஜி.கே.மணி தொடங்கி வைத்தார்.;

Update: 2023-12-18 15:55 GMT

மக்களுடன் முதல்வர் முகாமை தொடங்கி வைத்த எம்எல்ஏ


இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

மக்களுடன் முதல்வர் முகாம் பென்னாகரம் சட்டமன்ற உறுப்பினர் ஜி கே மணி தொடங்கி வைத்தார் பென்னாகரம், டிச.18: பென்னாகரத்தில் நடைபெற்ற மக்களுடன் முதல்வர் மனு அளிப்பு முகாமை பென்னாகரம் சட்டமன்ற உறுப்பினர் ஜி கே மணி தொடங்கி வைத்தார். தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் பழைய பேருந்து நிலையம் பின்பகுதியில் உள்ள சமுதாய கூடத்தில் நடைபெற்ற மக்களுடன் முதல்வர் மனு பெரும் முகமை பென்னாகரம் சட்டமன்ற உறுப்பினர் ஜி கே மணி தொடங்கி வைத்து பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்று துறை சார்ந்த அலுவலர்களிடம் வழங்கினார்.

Advertisement

இதற்கு முன்னதாக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை காவல் துறை வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் தொகை தொகை ஆதிதிராவிடர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலதுறைகள் வாழ்வாதாரக் கடன் உதவிகள் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை மாற்றுத்திறனாளிகள் நலத்துறை உள்ளிட்ட துறைகளின் மனு அளிக்கும் முகாம்களை பார்வையிட்டார்.

இதில் மாவட்ட வருவாய் அலுவலர் பால் பிரின்சிலி ராஜ்குமார், தர்மபுரி மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் குருராஜன், வட்டாட்சியர் சவுக்கத் அலி வட்டார வளர்ச்சி அலுவலர் கல்பனா, செயல் அலுவலர் கீதா பென்னாகரம் பேரூராட்சித் தலைவர் வீரமணி மற்றும் அரசு அலுவலர்கள் முகாமில் கலந்து கொண்டனர் இந்த முகாமில் பொதுமக்கள் சுமார் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு சந்தானம் மனுக்களை வழங்கினர்.

Tags:    

Similar News