செஞ்சியில் மக்களுடன் முதல்வர் குறைதீர்க்கும் முகாம்

Update: 2023-11-23 07:34 GMT
செஞ்சியில் மக்களுடன் முதல்வர் குறைதீர்க்கும் முகாம்
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி பேரூராட்சியில் மக்களுடன் முதல்வர் குறை தீர்க்கும் சிறப்பு முகாம் செஞ்சி தேசூர் பாட்டையில் உள்ள சமுதாய கூடத்தில் நடைபெற்றது. இதற்கு திண் டிவனம் சப்-கலெக்டர்(பொறுப்பு) தமிழரசன் தலைமை தாங்கினார். கடலூர் மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் வெங்கடேசன், செஞ்சி ஒன்றியக் குழுதலைவர் விஜயகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேரூராட்சிமன்ற தலைவர் மொக்தியார் அலி மஸ்தான் வரவேற்றார்.

நிகழ்ச்சியில் சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் கலந்து கொண்டு மக்களுடன் முதல்வர் குறை தீர்க்கும் சிறப்பு முகாமை தொடங்கி வைத்து பேசினார். அப்போது மக்களின் குறைகளை விரைந்து தீர்ப்பதற்காக மக்களுடன் முதல்வர் என்ற மாபெரும் திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இத் திட்டத்தில் பொதுமக்களின் அனைத்து குறைகளையும் கணினி வழியில் பதிவேற்றம் செய்து முதல்-அமைச்சரின் நேரடிப்பார்வையில் உடன டியாக நடவடிக்கை மேற் கொண்டு குறைகள் நிவர்த்தி செய்யப்படும் என்றார். தொடர்ந்து நடைபெற்ற முகாமில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு பட்டா மாற்றம், குடும்ப அட்டை, உள்ளிட்ட பல் வேறு கோரிக்கைகள் தொடர்பான மனுக்களை அதிகாரிகளிடம் கொடுத்தனர். பொது மக்களிடம் இருந்து பெறப்பட்ட மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் கணினியில் பதிவேற்றம் செய்தனர்.

Tags:    

Similar News