மேட்டூரில் மக்களுடன் முதல்வர் திட்டம் முகாம்
சேலம் மாவட்டம், மேட்டூர் அருகே ஜலகண்டாபுரத்தில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நடைபெற்றது.
Update: 2024-01-05 11:09 GMT
சேலம் மாவட்டம், மேட்டூர் அருகே ஜலகண்டாபுரம் தனியார் திருமண மண்டபத்தில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் இன்று நடைபெற்றது. இந்த முகாமினை தி.மு.க, மாநில தொழிலாளர் அணி துணை செயலாளர், ஜலகண்டாபுரம் பேரூராட்சி தலைவர் சி.காசி குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். இதில் காவல்துறை, ஆதிதிராவிடர் நலத்துறை, கூட்டுறவு துறை உள்ளிட்ட 13 துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர். சாலை வசதி, பட்டா மாறுதல், இலவச வீட்டு மனை பட்டா, குடிநீர் வசதி உள்ளிட்ட ஏராளமான மனுக்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டது. பொதுமக்களிடம் பெறப்பட்ட மனுக்கள் மீது விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு அதிகாரிகள் தெரிவித்தனர். தாசில்தார் சுமதி, ஜலகண்டாபுரம் பேரூராட்சி செயல் அலுவலர் ஜெயக்குமார், பேரூராட்சி உதவி இயக்குனர் கணேஷ் ராம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.