ராசிபுரத்தில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்

ராசிபுரத்தில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நடந்தது.

Update: 2023-12-18 13:50 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

அரசுத்துறைகளை அன்றாடம் அணுகும் பொதுமக்களுக்கு, அரசு அலுவலர்கள் வழங்கும் சேவைகளை மேலும் செம்மைப்படுத்தி, அரசின் சேவைகள் விரைவாகவும் எளிதாகவும் அவர்களைச் சென்று சேரும் வகையிலும், நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மையை ஏற்படுத்திட “மக்களுடன் முதல்வர்” என்ற புதிய திட்டத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கோயம்புத்தூரில் தொடங்கி வைத்தார். நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் - ஆத்தூர் சாலையில் உள்ள ஸ்ரீ குமரவேல் திருமண மண்டபத்தில் ராசிபுரம் நகராட்சி வார்டு எண்: 10, 11, 13, 24, 25, 26, 27 ஆகிய பகுதிகளுக்கு நடைபெற்ற மக்களுடன் முதல்வர் திட்ட முகாமினை வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் துவக்கி வைத்து, பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்.

முகாமிற்கு, மாவட்ட ஆட்சியர் மருத்துவர் ச.உமா, தலைமை வகித்தார். நாமக்கல் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.கே.பி.சின்ராஜ் முன்னிலை வகித்தார். 18.12.23 முதல் 29.12.2023 வரை ஒன்பது நாட்கள் காலை 10 மணி முதல் மாலை 03.00 மணி வரை (அனைத்து வேலை நாட்களிலும்) 5 நகராட்சி, 18 பேரூராட்சிகள் ஆகிய இடங்களில் மொத்தம், 39 முகாம்கள் நடைபெற உள்ளது. இத்திட்டத்தின் முக்கிய நோக்கங்கள் மக்களுக்கான சேவைகள் அவர்களுக்கருகாமையில் வழங்குவது, தேவையற்ற அலைக்கழிப்புகளை தவிர்த்தல், குறிப்பாக விளிம்பு நிலை மக்கள் மாற்றுத்திறனாளிகள் வயது முதிர்ந்தோர்களுக்கு அவர்களைத்தேடி அரசு சேவைகளை வழங்கிடுவதாகும். இத்திட்டத்தின் கீழ், மின்சார வாரியம், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை/ ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, வீட்டு வசதி மற்றும் நகர்புற வளர்ச்சித் துறை, காவல் துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை, சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத் துறை, ஆதிதிராவிடர் பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை, வாழ்வாதார கடன் உதவிகள் ஆகிய துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டு தங்கள் துறைக்குட்பட்ட மனுக்களுக்கு 30 நாட்களுக்குள் தீர்வு காணும் வகையில் இந்த முகாம்கள் நடைபெற உள்ளது.

ராசிபுரத்தில் நடந்த முகாமில், ராசிபுரம் நகர்மன்ற தலைவர் முனைவர் ஆர்.கவிதா சங்கர், வட்டாட்சியர் சரவணன்,பெற்றோர் ஆசிரியர் சங்கம் ராசிபுரம் நகர கழக செயலாளர் என்.ஆர்.சங்கர், அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துக்கொண்டனர்.

Tags:    

Similar News